Friday, December 30, 2011

2011இல் தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்கள் (வசூல் அடிப்படியில்)

2011ஐ பொறுத்தவரை ரஜினியின் எந்திரனின் தாகம் மறையாமலேயே ஆரம்பமானது, இது 2011 முதல் காலாண்டு வரை தொடர்ந்தது. இந்த ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை, ஆனால் இதையே தான் ஒவோருவருடமும் கூறுகிறார்கள் சினிமா விமர்சகர்கள் என்பது வேறு கதை.

இப்பொழுது படங்களின் பட்டியலுக்கு வருவோம்

1. மங்காத்தா

அஜீத் இன் 50வது படம் என்ற பெரிய பெயருடனும் பெரிய எதிர்பார்ப்புடனும் வெளியானது. அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி - என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 135 கோடி. (எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம்).

2. கோ

அயனுக்கு அடுத்து கே.வி ஆனத்தின் நல்ல விறுவிறுப்புக்கள், திருப்பங்கள் நிறைந்த, பரபரவென நகர்ந்த காட்சிகள் உடைய முயற்சி. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய படம். ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம்.
நல்ல வசூலும் பெயரும் பெற்று தந்த படம்.

3. காஞ்சனா

சின்ன பட்ஜெட், மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய நட்சத்திர அந்தஸ்துகள் , செலவுகள் எதுவும் இல்லாமல் ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர், மற்றும் நடிகர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார், இப்படத்தில் கோவை சரளாவும் இவரும் சேர்ந்தது நகைச்சுவையில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள்.

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.
4. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ.எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா.

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இயக்குனர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது.

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி படம் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி (இதுவரை முழுமையான அதிகாரபூர்வமான, ஆதாரபூர்வமான இறுதி அறிவிப்புகள் வரவில்லை).

7. வேலாயுதம்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல் (இதுவரை 80 கோடி என்கிறது ஒரு தகவல்).

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள்.

9. வானம்

வானம் 2011இல் ஒரு பெயர் சொல்லிக்கொள்ளகூடிய படம் அது வசூலிலும் சரி கதையிலும் சரி, சிம்புவின் பெரிய அலட்டல்கள் இல்லாமல் இயல்பான நடிப்பில் வெளியாகி நல்ல பெயர் பெற்ற படம். மூலக்கதை என்றால் தெலுங்கில் அல்லு அர்ஜீன நடித்த படம். நல்ல வசூலை தந்த சிம்பு- அனுஷ்கா - சந்தானம் நடித்த படம்.

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

நன்றி - http://tamil.oneindia.in/

Monday, December 26, 2011

2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்

1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.

வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.

வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.

மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.

3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4. விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.

Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.

சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.

நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி - http://www.lankasritechnology.com/

Saturday, January 8, 2011

Effect of Inception



சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகிறதாம். சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது. ஆனால் குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர். ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம். நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன (ஆனால் இது உண்மை இல்லை என்று கூறுகின்றது எனது அனுபவம்).


கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் 70% மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.


மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.


நன்றி - www.bbc.co.uk


கனவைப்பற்றிய மேலதிக தகவல்களுக்கு - http://www.bbc.co.uk/news/science-environment-11635625


Japanese கனவை பதியும் இயந்திரம் - http://www.youtube.com/watch?v=MElU0UW0V3Q