Thursday, September 30, 2010

வெளிநாடுகளில் திருவிழாக் கோலம். எந்திரன் முதல் அறிக்கை! (படித்ததில் சுட்டது)

"சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை... எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்... குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!"

- எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை' இது என்றால் மிகையல்ல.

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர்.

படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்:

"சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார்.

ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

Saturday, September 25, 2010

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார்.

இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

Wednesday, September 22, 2010

முதல் பார்வையிலே காதல் வருமா(படித்ததில் சுட்டது )

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?

ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.

அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.

பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.

முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.

உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.

காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.

இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…

எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.

தொலைபே‌சி அர‌ட்டை‌

ஒருவ‌ர் காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்பதை அவரது காதையு‌ம், செ‌ல்பே‌சியையு‌ம் வை‌த்து‌ச் சொ‌ல்‌லி‌விடலா‌ம். எ‌ங்க அவ‌ர் காதை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது. எ‌ப்போது‌ம் கா‌தி‌ல் செ‌ல்பே‌சி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறதே எ‌ன்று சொ‌ன்னா‌ல், அவ‌ர் ‌நி‌ச்சய‌ம் காத‌லி‌ல் ‌விழு‌ந்தவராக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்(இது டெ‌‌லி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ங் வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ப் பொரு‌ந்தாது).

பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ள் வெகு நேர‌ம் தொலைபே‌சி‌யி‌ல் அ‌ர‌ட்டை அடி‌ப்பதை வழ‌க்காமாக‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌நி‌ற்கு‌ம் போது, நட‌க்கு‌ம் போது பய‌ணி‌க்கு‌ம் போது என எ‌ப்போது‌ம் ஏதாவது ஒ‌ன்று இவ‌ர்க‌ள் வா‌யிலு‌ம், காத‌லு‌ம் போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

கூட இ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன், ம‌ணி‌க்கண‌க்கா அ‌ப்படி எ‌ன்ன‌த்தா‌ன் பேசுவா‌ர்களோ எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு அ‌ப்படி பே‌சிய‌வ‌ர்களாக‌‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது வேறு கதை.

ஆனா‌ல் இ‌ப்படி தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை எ‌ன்பது எடு‌த்து‌க் கூறவே இ‌ந்த க‌ட்டுரை. அதாவது, இ‌ப்படி செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், ஒருவரது படி‌ப்போ அ‌ல்லது ப‌ணியோ, ம‌ற்றவ‌ர்களுடனான சுமூக உறவோ பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல், தொட‌ர்‌ந்து அ‌ப்படி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்க முடியாத‌ல்லவா? ஒ‌ன்றை பா‌தி‌க்கு‌ம் ம‌ற்றொ‌ன்றை எ‌ப்படி தொட‌ர்‌வீ‌ர்க‌ள்.

‌விஷய‌த்‌தி‌ற்கு வரு‌வோ‌ம். காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் 23.55 ‌நி‌மிட‌ங்களை செ‌ல்பே‌சி‌யி‌லேயே ‌க‌ழி‌த்த காதல‌ர்க‌ள் ‌சில மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு வெ‌ளி உலக‌ம் ஒ‌ன்று இரு‌ப்பதை அ‌றிவா‌ர்க‌ள்.

‌பிறகு இவ‌ர்களது பே‌ச்சு நேர‌‌ம் குறையு‌ம். ஒரு முறை, ஆசையாக போ‌ன் செ‌ய்யு‌ம்போது, ரொ‌ம்ப மு‌க்‌கியமான வேலை‌யி‌ல் இரு‌க்‌கிறே‌ன். இரவு பேசலா‌ம் எ‌ன்று ம‌ற்றவ‌ரி‌ன் ப‌திலு‌க்கு‌க் கூட காத‌்‌திராம‌ல் போனை க‌ட் செ‌ய்யு‌ம் ‌நிலையு‌ம் ஏ‌ற்படு‌ம்.

உ‌ண்மை‌யிலேயே ஒருவ‌ர் அதுபோ‌ன்ற இ‌க்க‌ட்டான சூ‌ழ்‌நிலை‌யி‌ல் இரு‌ந்தாலு‌ம், இது ஆர‌ம்ப‌த்‌தி‌ல் காதலரு‌க்கு எ‌ரி‌ச்சலை உ‌ண்டா‌க்கு‌ம். காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் அலுவலக‌ம், கோ‌யி‌‌ல் எ‌ன்று எ‌தையு‌ம் பாராம‌ல் செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சியவ‌ர், இ‌ப்போது ந‌ம்மை உதா‌சீன‌ப்படு‌த்துதாக மன‌ம் குமுறு‌ம்.

எனவே இ‌ந்த ‌சி‌க்கலை‌த் ‌தீ‌ர்‌க்க, ஆர‌ம்ப‌த்‌திலேயே, அலுவலக/பயண நேர‌த்‌தி‌ல் போ‌ன் பேசுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது நல‌ம்.

ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌‌நிறைய‌ப் பே‌சி ‌பி‌ன்ன‌ர் பேசாம‌ல் இரு‌‌க்கு‌ம்போது காத‌ல் புய‌ல் வலுவ‌ற்று‌ப் போனதாகத‌் தெ‌ரியு‌ம். அதனா‌ல் எ‌த்தனை குறைவான நேர‌ம் பேச முடியுமோ, அ‌வ்வளவு குறைவான நேர‌த்தை ம‌ட்டு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு அதனை‌‌த் தொட‌ர்‌ந்து கடை‌பிடி‌த்தா‌ல் உ‌ங்க‌ள் காத‌லி‌ல் லேசான பூக‌ம்ப‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல் த‌வி‌ர்‌க்கலா‌ம்.