Monday, October 4, 2010

சும்மா Time Passக்கு (அவளும் Diagramமும்)

உன்னைக் காதலிக்க தொடங்கின போது Activity Diagram போல அழகாக சிக்கலில்லாம இருந்தாய் ஆனால் இப்போ ER-Diagramபோல சிக்கலாய் மாறிவிட்டது நீ கிட்ட கிட்ட வரும்போது State Diagram வரைவது போலசின்ன சின்ன வித்தியாசங்கள்(எமது State இல்).


சின்ன சின்ன பிரச்சினைகள்தான் வாழ்க்கையில் பிடிப்புகள் ஏற்படக்காரணம் Diagrams இல ஏற்படுகின்ற பிழைகளை திருத்தும் போது அதில் உள்ள interest அதிகரிப்பது போல எமது காதலின் பிடிப்பும் அதிகரித்தது.


உன்னை பற்றி எழுதும் கவிதைகள் Object Diagram வரைவது போல (உன்னை ஓர் class ஆக கருதி) ஒரு உணர்வு.


என்னதான் இருந்தாலும் இரவில உன்ட புகைப்படத்தை பார்ப்பதுசெய்த வேலையை preview பார்ப்பது போன்ற ஒரு திருப்தி.


சில வேளை உன்னோட கதைக்கைக்க சந்தோசம் சில வேளை கவலை அது எமது Communication Diagram இல் தங்கியது அது State Diagram ஐ மிகவும் பாதித்தது. SLIIT lab இல் ஒளிந்து ஒளிந்து மூஞ்சிபுத்தகம்(facebook) பாப்பது போல உன்னை ஒருநாளும் ஒழிந்து பாத்ததும் இல்லை.

சில வேளை யாரும் சில instructors கேள்விகள் எப்பவுமே நான் பதில் சொல்ல தெரியாமல் முளிப்பது போலவே நான் எங்கேயாவது உன்னை சந்திக்க கேட்டால் முழிப்பாய் பதில் சொல்ல மாட்டாய் நானும் காத்திருப்பன் பதில் வரும் வரும்எண்று பின்னர் yes சொல்லி பெரிய OPP எல்லாம் போடுவாய் உன் அப்பா அம்மாவுக்கு தெரிந்து விடும் என்று இல்லை என் அப்பா அம்மாவுக்கு தெரிந்து விடும் என்று அவளவு அன்பு உனக்கு என்னிடத்தில்.


உன்னோட கதைச்சு கதைச்சு சில விடயங்களை ஊகிச்சிக் கொள்ளுவன்ஆனால் சில வேளை அடுத்த நாள் நீ கதைப்பது நேற்றுக் கதைத்த்தற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு முதல் நாள் lecturesகும் அடுத்தநாள் lecturesகும் சம்மந்தம் இல்லாதது போல. இதனால் எமக்கிடையே உள்ள Relationship அடிக்கடி Dependency, Association, Aggregation, Composition என மாறிக்கொண்டே இருக்கும் ஒரு முறை நாளை online exam என்று அவளின் அம்மாவிடம் சொன்னேன் தந்த codingஐ கரெக்ட் பண்ணி கொடுக்கணும் என்று அதற்கு அவங்க சொன்னங்க முதல்ல உன்னை நீ பொறுப்பான பையனா மாத்து பிறகு Coding எல்லாம் மாத்தலாம் என்று.


பின்னர் தான் உணர்ந்தேன் Use-case Diagramல் பல Uses இருப்பது போல நமது வாழ்க்கையிலும் பலர் உள்ளார்கள் என்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் பல வேறு Attributes உண்டு என்று இப்படிதாங்க எதோ எழுத வந்திட்டு எதோ எழுதுவது போல தான் லும் அ கவனிக்காம வேற எதோ கவனிப்பது போல. பின்னர் weekக்கு முதல் இருந்து முக்கி முக்கி படிப்பது அட பாருங்க இப்ப எனக்கு Study Leave இப்பவாவது படிப்பம் என்று இல்ல இத எழுதிட்டு இருக்கிறன் சரி சரி விடுங்க பொது வாழ்கையில இது எல்லாம் சகஜமப்பா...


சரி இப்ப நான் படிக்கபோறன் (சாப்பாட முடிச்சிட்டு அது தானே முக்கியம் ) என்னொரு விடயம் நண்பர்களே கடந்த எந்திரன் எனது பார்வையில்... நண்பர் Paheeradan தனது பெயரை குறிப்பிடவில்லை என்று கவலைப்படிருந்தார் அதனால இன்று Paheeradan உடன் சாப்பிட செல்லலாம் என்று உள்ளேன் மீதி பின்னர் எழுதுகேறேன்,

நன்றி வணக்கம்.


No comments:

Post a Comment