

தான் இருக்கு அந்தப்படத்தில என்று நீங்கள்
கேட்கலாம். விமர்சகர்கள் கூறுகிறார்கள் அப்படி என்ன தான் இல்லை என்று... கடந்த 3ஆண்டுகளாக என்திரனுக்காக காத்திருந்த காத்திருப்பு இன்றோடு முடிந்தது. ரூ.190 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட எந்திரன் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் கிடத்தட்ட 3௦௦௦ திரைஅரங்குகளில் இன்று திரைக்கு வந்துள்ளது.நேற்று மாலை 9.00 மணி வீடை அடைந்ததும் ஒரு பெரிய கவலை எந்திரன் (V.I.P show) பார்க்க முடியல என்கிற வருத்தம், காரணம் பல அவற்றுள் சில மறுதினம் காலை 8.30கு exam.( எங்களைப்பற்றி தான் தெரயுமே நாளை எக்ஸாம் ஏன்டா இன்று 12.00கு தான் படிப்பம் என்று), அது மட்டும் அல்ல
டிக்கெட் விலை... ஒரு திரைஅரங்கில் ODC 1800Rs, பலகணி 2500Rs , மற்றயதில் ODC 25௦௦ பலகணி 3௦௦௦ அதால நிதி நெருக்கடி வேறு (இத வெளில யாருக்கும் சொல்லாதிங்க...) மனதை சரி படுத்தி தூங்கி காலை 7 .00 மணிக்கு அடிச்சு பிடிச்சு எழும்பி SLIIT கு சென்று exam ஐ முடிச்சிட்டு 1 lectures கும் முகத்த காட்டிட்டு (இன்று தான் 2ம் வருட இறுதிநாள் என்பதால்(நண்பர்கள் அனைவரும் பிரியப்போகிறார்கள் என்ற கவலை)) இவற்றை எல்லாம் முடிச்சிட்டு சினிசிட்டி போய் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு டிக்கெட் (இடையில் வரிசையில் நிக்கிறப்போ நாலு மொக்கை காமடி வேற... ) எடுத்து உள்ள போய் உக்காந்தா A.R.R இன் பாட்டு ஆரம்பமே அமர்க்களம். 10 நிமிடங்களுக்கு பின்னர் படம் அமர்க்கள ஆரம்பம்(என்ன விசில் என்ன கூ... சத்தம்...)
எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் ஒரு ஆரம்பம்(புதிய மனிதா... பாடலுடன் ரஜினியா இது... வழக்கமான பஞ்ச் டயலாக், ஸ்டைல் மானரிசங்கள், அதிரடி அறிமுககாட்சி எதுவுமே இல்லாத ஒரு அறிமுகம் ). டாக்டர் வசீகரன்(ரஜினி) 10 வருடம் முயன்று ஒரு மனித ரோபோவை உருவாகுகிறார். சில சோதனைகளுக்கு பின்னர் அதை மனிதர்களிடம் இருந்து வேறுபடும் உணர்வுகளையும் கொடுக்கிறார். மனிதனாகவே மாறிய அந்த ரோபோ அடுத்து மனித இனத்தின் ஒட்டுமொத்த தீயகுணங்களையும் சுவீகாரம் எடுத்துக்கொள்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரிந்த முடிவுதான் என்றாலும் யாரும் அத்தனை சுலபத்தில் கற்பனை செய்து பாக்கமுடியாத க்ளைமாக்ஸ் (அங்கதான் நிக்கிறார் ஷங்கர்...!!!)
ஐஸ்வர்யா ராய்... அழகின் மோத்த உருவமாய் வந்து( இவங்கள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா???) மனதை அள்ளிக்கொள்கிறார், கோபம், கெஞ்சல், அழுகை,கொஞ்சல்,நடனம் என ரஜினியுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் என்று தான் சொல்லனும். ரஜினியுடன் அவருக்கு நடக்கும் காதலும் ஊடலும் அதை ஐஸ்... தீர்க்கிற விதம் காதலர்களை சூடேற்றும் விதமான திரைக்கதை. வில்லனாக வரும் டேனி இக்கு பெரிதாக வேலைஇல்லை, காமடிக்காக சேர்க்கப்பட்ட சந்தானம் கருணாசுக்கும் கூட... இந்தப் படத்தில் மிக முக்கியமான அம்சம் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோசின் ரோபோடானிக்ஸ்இந்தப் படத்தில் மிக முக்கியமான அம்சம் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோசின் ரோபோடானிக்ஸ் மற்றும் லேஹசி எபக்ட்ஸ் இன் கிராபிக்ஸ் பிரமாண்டம். ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் சாபு சிரிலின் கலையும் ஆண்டனின்எடிட்டிங்கும், பீட்டர் கையின் இன் ஸ்டன்ட்இகும் சபாஸ், அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை... ஆனால் மஹா அர்த்தமுள்ளவை!.A.R ரஹ்மானின் இசை இனொரு ஹீரோ என்று தான் சொல்லணும். பின்னணி இசையில் சும்மா பின்னி எடித்திருக்கிறார் பாருங்க... (பாடல்களைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரியும் தானே)
மொத்தத்தில் இந்திய இளையவர்கள் அனைவரும் ரோபோடிக் பாட நெறி நுழைவுக்காக வசையில் நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...!!!
இனிய நிறைவுடன் (அஆஹா படம் இவளவு சீக்கிரமா முடிசுதே என்ற பீலிங் வேறு.... அனால் மோத்த படம் 2 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் ) வீடு வந்து நண்பர் நிருயனிடம் இரவு சாப்பாடிற்க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு சிறிது நேரம் நண்பர்களுடன் கரம்பலகை விளையாடி விட்டு இதை எழுத்த ஆரம்பித்தேன்...
No comments:
Post a Comment